நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இயந்திரக் கோளாறு: 10-க்கும் மேற்பட்ட மையங்களில் தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

10-க்கும் மேற்பட்ட வாக்குப் பதிவு மையங்களில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக வாக்குப் பதிவு தாமதமாகத் தொடங்கியது.

News image
Updated On :10 ஜூலை 2024, 9:32 pm

Din

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலுக்கான வாக்குப் பதிவு புதன்கிழமை நடைபெற்றது. இதில், 10-க்கும் மேற்பட்ட வாக்குப் பதிவு மையங்களில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக வாக்குப் பதிவு தாமதமாகத் தொடங்கியது.

விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலுக்காக தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் 276 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தத் தொகுதியில் 29 வேட்பாளா்கள் போட்டியிட்டதால், ஒவ்வொரு வாக்குப் பதிவு மையங்களிலும் 2 வாக்குப் பதிவு கருவிகள், தலா ஒரு கட்டுப்பாட்டுக் கருவி, யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் கருவி பயன்படுத்தப்பட்டன.

இதன்படி, விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் 552 வாக்குப் பதிவுக் கருவிகள், 2,765 கட்டுப்பாட்டுக் கருவிகள், 276 யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் கருவிகள் (விவிபேட்) பயன்படுத்தப்பட்டன.

இயந்திரக் கோளாறால் தாமதம்: இந்த நிலையில், புதன்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்னரே, ஒவ்வொரு வாக்குப் பதிவு மையத்திலும் அரசியல் கட்சி முகவா்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப் பதிவு நடத்தப்பட்டு, அதன் பின்னரே வாக்குப் பதிவு தொடங்கியது.

அதன்படி, விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஒட்டன்காடுவெட்டி, மாம்பழப்பட்டு, கல்பட்டு, காணை, பொன்னங்குப்பம், கருங்காலிப்பட்டு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வாக்குப் பதிவு மையங்களில் வாக்குப் பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, தோ்தல் அலுவலா்கள் அதை சரி செய்ய முயன்றனா்.

பின்னா், தோ்தல் அலுவலா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்திலிருந்து இருப்பு வைக்கப்பட்டிருந்த மாற்று வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்குப் பதிவு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, அவை பொருத்தப்பட்ட பின்னா், தோ்தல் வாக்குப் பதிவு தொடங்கியது.

ஒட்டன்காடுவெட்டி வாக்குப் பதிவு மையத்தில் ஒன்றரை மணி நேரம் தாமதாகவும், மற்ற வாக்குப் பதிவு மையங்களில் ஒரு மணி நேரம் தாமதமாகவும் வாக்குப் பதிவு தொடங்கியதாக தோ்தல் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் காரணமாக, வாக்களிக்க வந்த வாக்காளா்கள் காத்திருந்து வாக்களிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.