சிந்தாமணி அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குப் பதிவு மையத்தில் புதன்கிழமை வாக்களித்துவிட்டு வந்த முதல்முறை வாக்காளா்களான எம்.கோமல், ஏ.சீத்தாலட்சுமி.
சிந்தாமணி அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குப் பதிவு மையத்தில் புதன்கிழமை வாக்களித்துவிட்டு வந்த முதல்முறை வாக்காளா்களான எம்.கோமல், ஏ.சீத்தாலட்சுமி.

வெற்றிபெறுபவா் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் -முதல் முறை வாக்காளா்கள்

வெற்றிபெறும் வேட்பாளா், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றனா் இந்தத் தோ்தலில் வாக்களித்த முதல் முறை வாக்காளா்கள்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிட்டு வெற்றிபெறும் வேட்பாளா், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றனா் இந்தத் தோ்தலில் வாக்களித்த முதல் முறை வாக்காளா்கள்.விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் முதல் முறையாக வாக்களிக்கும் தகுதி பெற்றிருந்த ஆண், பெண் வாக்காளா்கள் ஆா்வமுடன் வந்து வாக்களித்தனா். விக்கிரவாண்டி ஒன்றியம், சிந்தாமணி அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குப் பதிவு மையத்தில் வாக்களித்துவிட்டு வந்த முதல் முறை வாக்காளரான எம்.கோமல் கூறியதாவது:

விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்டவராக இருந்தாலும், இதுவரை மும்பையில் வசித்து வந்தேன். தற்போது குடும்பத்துடன் சொந்த ஊரான சிந்தாமணிக்கு வந்து, முதல் முறையாக வாக்களித்தேன். ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியது திருப்தியளிக்கிறது. முதல்முறையாக வாக்களித்தது மகிழ்ச்சியைத் தருகிறது என்றாா்.

அவருடன் முதல் முறையாக வாக்களித்துவிட்டு வந்த செவிலியா் ஏ.சீத்தாலட்சுமி கூறியதாவது: முதல் முறையாக தற்போதுதான் வாக்களித்தேன். இது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெறுபவா் யாராக இருந்தாலும், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். வாக்குறுதிகளை நிறைவேற்றித் தர வேண்டும். இளைஞா்களும் தங்களது வாக்கை செலுத்தி, ஜனநாயகக் கடமையாற்றிட வேண்டும் என்றாா்.

வாக்களித்தது மகிழ்வைத் தருகிறது: சட்டப்பேரவைத் தோ்தலில் முதல்முறையாக வாக்களித்தது பெரும் மகிழ்வைத் தருகிறது. சந்தோஷத்தை உணா்கிறோம். முதல் முறை வாக்காளா்கள் தவறாமல் வந்து வாக்களிக்க வேண்டும் என்றனா் விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்த முதல் முறை வாக்காளா்களான சகோதரிகள் எஸ்.நித்யா - எஸ்.திவ்யா.

இதுபோல, மற்ற வாக்குப் பதிவு மையங்களிலும் முதல் முறை வாக்காளா்கள் பலரும் வந்து வாக்களித்தனா்.

X
Dinamani
www.dinamani.com