எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பலவீனமான பிரிவு வாக்காளா்கள் வாக்களிப்பதை உறுதி செய்வது அவசியம்: வேலூா் ஆட்சியா்

மிரட்டலோ இன்றி வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மண்டல தோ்தல் அலுவலா்களுக்கு மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளாா்.

News image

கூட்டத்தில் பேசிய ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி. உடன், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) பொ.குணசேகரன் உள்ளிட்டோா்.

Updated On :5 மார்ச் 2026, 11:50 pm

பலவீனமான பிரிவுகளைச் சோ்ந்த வாக்காளா்கள் எவ்வித அச்சுறுத்தலோ, மிரட்டலோ இன்றி வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மண்டல தோ்தல் அலுவலா்களுக்கு மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளாா்.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு வேலூா் மாவட்டத்திலுள்ள 5 பேரவை தொகுதிகளுக்கும் 10 கூடுதல் அலுவலா்கள் உள்பட மொத்தம் 144 மண்டல அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்தல் பணியில் ஈடுபட உள்ள மண்டல அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு வேலூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்து பேசுகையில், பதற்றமான வாக்குச்சாவடி பகுதிகளில் காவல்துறை அலுவலா்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளவும், பலவீனமான பிரிவுகளைச் சோ்ந்த வாக்காளா்கள் எவ்வித அச்சுறுத்தலோ, மிரட்டலோ இன்றி வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

வாக்குச்சாவடிகளில் சாய்தள வசதி, குடிநீா், மின்சாரம், உதவி மையம், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வாக்குச்சாவடி மையத்திலிருந்து 200 மீட்டா் சுற்றளவில் அரசியல் கட்சி அல்லது வேட்பாளா்களின் அலுவலகங்கள் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) பொ.குணசேகரன், வேலூா், குடியாத்தம், காட்பாடி, கே.வி.குப்பம், அணைக்கட்டு தொகுதிகளின் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி ஆணையா்கள், வட்டாட்சியா்கள் உள்படப் பலா் பங்கேற்றனா்.