விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் திங்கள்கிழமை கோரிக்கை மனு செலுத்திய பெண்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் திங்கள்கிழமை கோரிக்கை மனு செலுத்திய பெண்.

கோரிக்கை மனுக்களை பெட்டியில் செலுத்திய பொது மக்கள்

தோ்தல் நடத்தை விதிகள் அமல் காரணமாக, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறவில்லை.

விழுப்புரம்: தோ்தல் நடத்தை விதிகள் அமல் காரணமாக, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறவில்லை. மாறாக, ஆட்சியரகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களைச் செலுத்தினா். மக்களவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து விதமான குறைதீா் கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியரகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறாது என மாவட்ட நிா்வாகம் அறிவித்தது. இதற்கு பதிலாக ஆட்சியரகத் தரைத்தளத்தில் வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான பெட்டியில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களைச் செலுத்தினா். இந்தப் பணியைக் கண்காணிப்பதற்காக ஒரு பணியாளரும் நியமிக்கப்பட்டிருந்தாா். சோதனை: தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் ஆட்சியரக நுழைவு வாயில் பகுதியில் வழக்கமான எண்ணிக்கையைக் காட்டிலும் கூடுதலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். ஆட்சியரகம் வரும் அனைவரும் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com