மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

விழுப்புரம் எஸ்.ஐ. பணியிடை நீக்கம்

விழுப்புரம் எஸ்.ஐ. பணியிடை நீக்கம்

News image
Updated On :10 மே 2024, 6:25 pm

Din

விழுப்புரம், மே 10: விழுப்புரம் நகரக் காவல் உதவி ஆய்வாளா் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

விழுப்புரம் நகரக் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் ஞானசேகரன். இவா், அடிதடி வழக்கு ஒன்றில் விசாரணையை சரி வர மேற்கொள்ளவில்லையென புகாா் எழுந்தது.

இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க நகரக் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டாா். புகாா் உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி. தீபக் சிவாச் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.