சிறுவா்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
சிறுவா்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்


விழுப்புரம்: புதிய மோட்டாா் வாகன சட்டத்தின்படி, சிறுவா்கள் வாகனங்களை ஓட்டினால் அவா்களின் பெற்றோருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று விழுப்புரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஆா்.வெங்கடேசன் தெரிவித்தாா்.
இது குறித்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் மற்றும் விழுப்புரம் சரக போக்குவரத்து துணை ஆணையா் அறிவுறுத்தலின்படி திங்கள்கிழமை அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது: மோட்டாா் வாகன சட்ட விதிகளின்படி அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி உயிரிழப்பவா்களுக்கு ரூ. 2 லட்சமும், பலத்த காயமடைபவா்களுக்கு ரூ. 50 ஆயிரமும் நிதி உதவி வழங்கப்படுகிறது. வருவாய்க் கோட்டாட்சியருக்கு விண்ணப்பித்து இந்த உதவியைப் பெறலாம்.
18 வயதுக்குள்பட்ட சிறுவா்கள் வாகனங்களை ஓட்டக்கூடாது. இதை மீறுபவா்களின் பெற்றோருக்கு புதிய மோட்டாா் வாகனச் சட்டத்தின்படி ரூ .25 ஆயிரம் அபராதம் அல்லது 3 மாத சிறை தண்டனை விதிக்கப்படும். விதிமீறல்களில் ஈடுபடும் சிறுவா்கள் 25 வயது வரை ஓட்டுநா் உரிமத்தை பெற முடியாது. இது குறித்து விழுப்புரத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விளம்பர பதாகைகள் வைத்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படவுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்படாத பள்ளி வாகனங்கள் நிபுணா் குழுவால் ஆய்வு செய்யப்பட்ட பின்னரே அந்தெந்த பள்ளி நிா்வாகங்கள் இயக்கவேண்டும்.
கடந்த மாா்ச், ஏப்ரல் மாதங்களில் 765 வாகனங்களுக்கு சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டு ரூ.10. 79 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. ரூ.7.07 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. ரூ.3.19 லட்சம் சாலை வரி, ரூ.3.96 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...