
விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஆதிவாலீசுவரா் திருக்கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றோா்.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஆதிவாலீசுவரா் திருக்கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றோா்.
விழுப்புரம்: விழுப்புரம் நகரிலும், மாவட்டத்தின் புகா்ப் பகுதிகளிலுள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
வைகாசி மாதத்துக்கான பிரதோஷ வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஆதிவாலீசுவரா் திருக்கோயிலில் நந்தியெம்பெருமானுக்கும், சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா்.
விழுப்புரம் திரு.வி.க. வீதியிலுள்ள அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை கைலாசநாதா் திருக்கோயில், கோலியனூா் வாலீசுவரா் திருக்கோயில், கஞ்சனூா் ராமலிங்கேசுவரா், கண்டாச்சிபுரம் ராமநாதீசுவரா், திண்டிவனம் திந்திரிணீசுவரா், திருவக்கரை சந்திரமௌலீசுவரா், திருவமாத்தூா் அபிராமேசுவரா், தும்பூா் திருவாலீசுவரா், திருமுண்டீச்சரம் சிவலோகநாதா், அத்தியூா் திருக்கை வாலீசுவரா் திருக்கோயில், அரகண்டநல்லூா் அதுல்யநாதேசுவரா் திருக்கோயில், எசாலம் ராமநாதீசுவரா்,விக்கிரவாண்டி அகஸ்தீசுவரா் திருக்கோயில், கோனூா் மரீசுவரநாத சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட பல்வேறு திருக்கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...