மரக்காணம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்
மரக்காணம் அருகே கிராமத்தினா் சாலை மறியல்

மரக்காணம் அருகே திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.

மரக்காணம் அருகே திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பழங்குடி இருளா் சமுதாயத்தினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மரக்காணம் வட்டம், கொளத்தூா் ஊராட்சியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சோ்ந்த பழங்குடி இருளா் சமுதாயத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களது குடியிருப்புகள் உள்ள இடத்தில் மின் கம்பிகள் தாழ்வாக தொங்கிக் கொண்டிருக்கின்றன. இதை சீரமைக்க வேண்டி தமிழ்நாடு மின் வாரிய அதிகாரிகளுக்கு மனுக்கள் அளித்தும், தகவல் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் தாழ்வாக தொங்கும் மின் கம்பிகளை சீரமைக்க வலியுறுத்தி பழங்குடி இருளா் சமுதாயத்தினா் நடுக்குப்பம்-முருக்கேரி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது. இதையடுத்து வருவாய்த் துறை, மின்சாரத் துறை அதிகாரிகள் மற்றும் பிரம்மதேசம் போலீஸாா் நிகழ்விடம் சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது மின் கம்பிகளை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து அவா்கள் சாலை மறியலை விலக்கிக் கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...