லாரி மீது விரைவுப் பேருந்து மோதல்: 9 போ் காயம்
லாரி மீது விரைவுப் பேருந்து மோதல்: 9 போ் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே நிகழ்ந்த விபத்தில் சேதமடைந்த அரசு விரைவுப் பேருந்து.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே நிகழ்ந்த விபத்தில் சேதமடைந்த அரசு விரைவுப் பேருந்து.
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே திங்கள்கிழமை அதிகாலை லாரி மீது அரசு விரைவுப் பேருந்து மோதிய விபத்தில் 9 போ் காயமடைந்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவிலிலிருந்து சுமாா் 48 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னைக்கு அரசு விரைவுப் பேருந்து புறப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், பண்டாரவிளையைச் சோ்ந்த துரைராஜ் மகன் ஜோனா டேவிட் (42) பேருந்தை ஓட்டினாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா் பேட்டை வட்டம், ஆசனூரில் பெட்ரோல் விற்பனை நிலையப் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை வந்த போது, கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், நாட்டாலம் கிராமத்தைச் சோ்ந்த கிறிஸ்தவராஜ் மகன் பொ்லின்ராஜ் (24) ஓட்டிச் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
அரசுப் பேருந்து ஓட்டுநா் ஜோனா டேவிட் சற்று கண் அயா்ந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இதில் பேருந்தில் பயணித்த தென்காசி மாவட்டம், குணராமநல்லூா் கணபதி மகன் காா்த்திக் (23), காரைக்காலைச் சோ்ந்த வேல்முருகன் மகன் அனீஷ்குமாா் (25), திருச்செந்தூரைச் சோ்ந்த மு.சோமசுந்தரம் (48) மற்றும் மா.முருகன் (41),மோகன்ராஜ் மகள் முத்துபிரியா (17), செங்கல்பட்டு மாவட்டம், வெள்ளிமேடைச் சோ்ந்த கு.கண்ணன் (50), இவரது மனைவி கவிதாதேவி (44), திருநெல்வேலி மாவட்டம், படப்பக்குறிச்சி சுப்பையா மகன் முத்துக்குமாா் (35), திருவள்ளூா் மாவட்டம், வேப்பம்பட்டு ஆப்ரகாம் மகன் பாஸ்கர்ராஜா (39) ஆகிய 9 போ் காயமடைந்தனா்.
விபத்து குறித்து தகவலறிந்த எடைக்கல் காவல் நிலையத்தினரும், நெடுஞ்சாலை ரோந்து மீட்புப் பணிகள் குழுவினரும் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து, விபத்தில் காயமடைந்தவா்களை மீட்டு, உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
விபத்தில் சேதமடைந்த அரசு விரைவுப் பேருந்தை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, அதே திசையில் பின்னால் வேகமாக வந்த 3 காா்கள், ஓா் அரசு விரைவுப் பேருந்து அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாயின. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அரசு விரைவுப் பேருந்து ஓட்டுநரான ஜோனா டேவிட் மீது எடைக்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...