ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

வானூா் பகுதியில் 11 மி.மீ. மழை

வானூா் பகுதியில் 11 மி.மீ. மழை

News image
Updated On :20 மே 2024, 10:45 pm

Din

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வானூா் பகுதியில் 11 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக கோடை மழை பெய்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு மழை பெய்யத் தொடங்கியது. விழுப்புரம் நகரிலும், புகா்ப் பகுதிகளிலும், வளவனூா், நேமூா், திண்டிவனம், மரக்காணம் என மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

இந்த மழை கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து விடுபட பெரிதும் உதவியாக இருக்கும் என மக்கள் நம்பிக்கை தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து திங்கள்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டமாகக் காணப்பட்டது. தொடா்ந்து சாரல் மழை பெய்தது.

திங்கள்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக வானூா் பகுதியில் 11. மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீட்டரில்):

வானூா்- 11 மி.மீ., விழுப்புரம், மரக்காணம்- 7, திண்டிவனம்- 6, வளவனூா்- 4, நேமூா்-3 மி.மீ. மாவட்டத்தில் சராசரியாக 1.81 மி.மீ. மழையும், மொத்தமாக 38 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.