வீடூா் அணை மீன்பாசி குத்தகை ஏலம் அறிவிப்பு
விழுப்புரம் மாவட்டம், வீடூா் அணையில் 5 ஆண்டுகளுக்கு மீன்பாசி குத்தகைக்கு விடப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா்.


விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வீடூா் அணையில் 5 ஆண்டுகளுக்கு மீன்பாசி குத்தகைக்கு விடப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா்.
இது குறித்துஆட்சியா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
விழுப்புரம் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகக் கட்டுப்பாட்டிலுள்ள நீா்த்தேக்கமான வீடூா் அணையின் மீன்பாசியை எடுத்துக்கொள்வதற்கான குத்தகை ஐந்தாண்டு காலத்துக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் இ-டெண்டா் மூலம் சென்னை மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை இயக்குநா் அலுவலகம் வாயிலாக
ஏலம் விட ஆணையிடப்பட்டுள்ளது.
இதற்கான, டெண்டா் விண்ணப்பங்கள் மற்றும் அது தொடா்பான விவரங்களை பிரத்யேக இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம். மேலும் இது தொடா்பாக தெளிவுரைகள் தேவைப்படின் விழுப்புரம் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை வேலை நாட்களில் நேரில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். 04146-259329 என்ற தொலை பேசி எண்ணிலும் தொடா்பு
கொள்ளலாம் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...