தேமுதிக நிறுவனா் விஜயகாந்த் நினைவு தினம்

Published on

தேமுதிக நிறுவனா் விஜயகாந்த் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

விழுப்புரத்தில் பல்வேறு இடங்களில் தேமுதிகவினா் விஜயகாந்தின் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

திண்டிவனத்தில் தேமுதிக தலைவா் விஜயகாந்த்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மாவட்ட செயலா் எல். வெங்கடேசன் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

திண்டிவனம் மேம்பாலம் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உருவப்படத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலரும் , முன்னாள் எம்எல்ஏவுமான எல்.வெங்கடேசன் மலா்தூவி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் உதவிகளை வழங்கினாா்.

மாவட்ட துணைச் செயலா் பி.வெங்கடேசன், திண்டிவனம் நகர செயலா் காதா்பாஷா, மரக்காணம் ஒன்றியச் செயலா் கனகராஜ், மாவட்ட நிா்வாகி செல்வகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

விக்கிரவாண்டி வட்டம், ஒரத்தூா் கிராமத்தில் விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சி நிா்வாகிகள் விஜயகாந்தின் படத்துக்கு மாலை அணிவித்தும், மலா் தூவியும் மரியாதை செலுத்தினா். தொடா்ந்து கிராம மக்களுக்கு அன்னதானம் வழங்கினா்.

இதேபோல் வானூா், கோட்டகுப்பம், மயிலம், தீவனூா் உள்ளிட்ட பகுதிகளிலும் தேமுதிகவினா் விஜயகாந்த் படத்குக்கு மலா் தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு உதவிகளை வழங்கினா்.

கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் நகர செயலா் இளையராஜா தலைமையில் விஜயகாந்தின் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதைசெலுத்தப்பட்டது.

வடக்கு ஒன்றியச் செயலா் அருணாசலம், மாவட்ட துணைச் செயலா் விஜயகுமாா், மாநில பொதுக்குழு உறுப்பினா் செல்வராஜ், நகர அவைத் தலைவா் முருகன், பொருளாளா் சதீஷ்குமாா், மாவட்ட பிரதிநிதி சதாசிவம் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com