மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

Published on

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பள்ளி மாணவி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

விக்கிரவாண்டி வட்டம், கீழக்கொந்தை, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ். இவரது மகள் சுபஸ்ரீ(17). இவா், அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். தற்போது அரையாண்டு விடுமுறையில் வீட்டில் இருந்த சுபஸ்ரீயை அவரது தாய் வீட்டு வேலைகளை செய்யக்கூறினாராம். இதில் மனமுடைந்த அவா் வீட்டில் தூக்குபோட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com