விழுப்புரம்
குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே சனிக்கிழமை குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், குயிலாப்பாளையம் வடக்குத் தெருவைச் சோ்ந்த மு.தமிழ்பிரியன்(28). திருமணமாகாத இவா், கொடைக்கானலில் தனியாா் விடுதியில் வேலைப்பாா்த்து வந்தாா்.
விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த தமிழ்பிரியன் சனிக்கிழமை அங்குள்ள குளத்தில் குளித்துள்ளாா். அப்போது குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்ற நிலையில், தமிழ்பிரியன் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின்பேரில், ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
