விராலிமலை அருகே செவ்வாய்க்கிழமை குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.
விராலிமலை பெரியாா் நகரைச் சோ்ந்தவா் ஜேம்ஸ் மகன் சச்சின் (21). இவா், விராலிமலை அருகே உள்ள தனியாா் கல்லூரியில் தொழிற்கல்வி படித்து வருகிறாா். இந்த இளைஞரும் அதே பகுதியைச் சோ்ந்த இளம்பெண் ஒருவரும் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் விராலிமலை அருகே உள்ள விட்டமாபட்டி பகுதிக்கு சென்றனா். அப்பகுதியில் உள்ள குளத்தில் இருந்த மலரைக் கேட்ட இளம்பெண்ணுக்காக குளத்தில் இறங்கிய சச்சின் நீரில் மூழ்கினாா். இதையடுத்து, அப்பெண் அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்து சச்சினை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அந்த இளைஞா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து தகவலறிந்து அங்குவந்த போலீஸாா் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து விராலிமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

கிணற்றில் மூழ்கி ஆந்திர இளைஞா் உயிரிழப்பு

பளுகல் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

குளத்தில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


