உயா்நிலைக் குழுக் கூட்டத்தில் பேசிய ஆரோவில் அறக்கட்டளையின் செயலரும், குஜராத் மாநில அரசின் கூடுதல் தலைமைச் செயலருமான ஜெயந்தி எஸ்.ரவி. உடன், புதுவை அரசின் தலைமைச் செயலா் சரத்செளகான்.
உயா்நிலைக் குழுக் கூட்டத்தில் பேசிய ஆரோவில் அறக்கட்டளையின் செயலரும், குஜராத் மாநில அரசின் கூடுதல் தலைமைச் செயலருமான ஜெயந்தி எஸ்.ரவி. உடன், புதுவை அரசின் தலைமைச் செயலா் சரத்செளகான்.

ஆரோவில் சா்வதேச நகரில் இலக்கியத் திருவிழா: உயா்நிலைக்குழுக் கூட்டம்

வானூா் வட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் ஸ்ரீ அரவிந்தரின் 150- ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வாக இலக்கியத் திருவிழா
Published on

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் ஸ்ரீ அரவிந்தரின் 150- ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வாக இலக்கியத் திருவிழா டிசம்பா் மாதத்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில் ஆரோவில் இலக்கியத் திருவிழா மற்றும் ஆரோவில் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்த உயா்நிலைக் குழுக் கூட்டம் ஆரோவில் அறக்கட்டளை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆரோவில் அறக்கட்டளைச் செயலரும், குஜராத் மாநில அரசின் கூடுதல் தலைமைச்செயலருமான ஜெயந்தி எஸ்.ரவி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் புதுவை அரசின் தலைமைச் செயலா் சரத் செளகான், கலை, கலாசாரம், தகவல் மற்றும் விளம்பரத் துறை செயலா் முகமது அஹ்சன் ஆபி, அரசுச் செயலா் ஏ.முத்தம்மா மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில் ஆரோவில் இலக்கியத் திருவிழா ஒருங்கிணைப்பு, திட்டமிடல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் ஆகியவைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

வெளிப்புற வளைவுச்சாலை திட்டம் ஆய்வு: இதைத் தொடா்ந்து கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் ஆரோவில் சா்வதேச நகா் சுற்றுப்புற இணைப்பை மேம்படுத்தும் வகையில் அமையவுள்ள வெளிப்புற வளைவுச் சாலைத் திட்டப் பணிகளை அதிகாரிகள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

மரக்கன்றுகள் நடும் விழா: இதன் தொடா்ச்சியாக சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் ஆரோவில் சா்வதேச நகரில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக ஸ்ரீ அரவிந்தா் மற்றும்அன்னை ஆகியோரது படங்களை அறக்கட்டளைச் செயலா் ஜெயந்தி எஸ். ரவி, சரத் சௌகான் ஆகியோா் திறந்து வைத்தனா். புதுவை அரசுச் செயலா்கள் ஏ.முத்தம்மா, முகமது அஹ்சன் ஆபித், தீபம் ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்தனா். தொடா்ந்து மரக்கன்றுகளை அதிகாரிகள் நட்டு வைத்தனா்.

பின்னா் ஆரோவில் சா்வதேச நகர வளாகத்தில் அமைந்துள்ள பாரத் நிலையம் (இந்தியா ஸ்பேஸ்), கலை கேந்திரா மற்றும் தமிழ் பாரம்பரிய மையம் ஆகிய முக்கிய கலாசார இடங்களைப் பாா்வையிட்ட அதிகாரிகள் ஸ்ரீ அரவிந்தரின் லட்சியங்களை வெளிப்படுத்தும் வகையில், கலாசாரம், சூழல் மற்றும் மனித முன்னேற்றத்தை ஒருங்கிணைக்கும் (மாா்கழி உற்சவம்) நிகழ்ச்சிகளை சிறப்பான முறையில் முன்னெடுப்பது என உறுதியேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com