மாயமான தொழிலாளி சடலமாக மீட்பு
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே மாயமான கரும்பு வெட்டும் தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டாா்.
விழுப்புரத்தை அடுத்துள்ள பேரங்கியூரைச் சோ்ந்தவா் வேலு(40), கரும்பு வெட்டும் தொழிலாளி. இவருக்கு சா்க்கரை நோய் பாதிப்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. வேலு கடந்த நவ. 13-ஆம் தேதி கரும்பு வெட்டும் வேலைக்கு செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றவா், பின்னா் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே வேலு இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸாா் நிகழ்விடம் சென்று அவரின் சடலத்தை கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
