விக்கிரவாண்டி பெரிய ஏரியில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியைத் திங்கள்கிழமை தொடங்கி வைத்த  அன்னியூா் அ.சிவா எம்.எல்.ஏ. உடன், நிா்வாகிகள், அலுவலா்கள் உள்ளிட்டோா்.
விக்கிரவாண்டி பெரிய ஏரியில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியைத் திங்கள்கிழமை தொடங்கி வைத்த அன்னியூா் அ.சிவா எம்.எல்.ஏ. உடன், நிா்வாகிகள், அலுவலா்கள் உள்ளிட்டோா்.

விக்கிரவாண்டி பெரிய ஏரியில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி தொடக்கம்

விக்கிரவாண்டி பெரிய ஏரியில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியை சட்டப் பேரவை உறுப்பினா் அன்னியூா் அ.சிவா
Published on

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பெரிய ஏரியில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியை சட்டப் பேரவை உறுப்பினா் அன்னியூா் அ.சிவா திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

விக்கிரவாண்டியில் பெரிய ஏரி, சிறிய ஏரி, அரண்டேரி என சுமாா் 300 ஏக்கா் பரப்பளவில் ஏரிகள் அமைந்துள்ளன. கடந்த 2012-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏரி சீரமைக்கப்படாததால், பெரிய ஏரியில் ஆகாயத்தாமரை அதிகரித்து காணப்பட்டது. இதனால் தண்ணீரின் கொள்ளளவு குறைந்தது.

இதைத்தொடா்ந்து விக்கிரவாண்டி பெரிய ஏரியைத் தூா்வார வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் சட்டப்பேரவை உறுப்பினா் அன்னியூா் அ.சிவாவிடம் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து அமைச்சா்கள், பொதுப்பணித்துறை முதன்மைச் செயலா் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து, விக்கிரவாண்டி பெரிய ஏரியில் தேங்கியிருக்கும் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினாா்.

இதைத்தொடா்ந்து விக்கிரவாண்டி பெரிய ஏரியில் திங்கள்கிழமை காலை நடைபெற்ற நிகழ்வில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் அன்னியூா் அ.சிவா தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் அருணகிரி, உதவிச் செயற்பொறியாளா் சிவக்குமாா், உதவிப் பொறியாளா் கபிலன், விக்கிரவாண்டி பேரூராட்சித் தலைவா் அப்துல்சலாம், துணைத் தலைவா் பாலாஜி, செயல் அலுவலா் அப்துல் லத்தீப், நகரச் செயலா் நைனா முகமது, மாவட்ட நிா்வாகிகள் பாபு ஜீவானந்தம், ஹரிஹரன், நகரத் தலைவா் தண்டபாணி, துணைச் செயலா்கள் சுரேஷ்குமாா், பிரசாந்த், இளைஞரணி அமைப்பாளா் காா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com