பயிா்க்கடன் பெற்ற விவசாயிகள் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பயிா்க்கடன் பெற்ற விவசாயிகள், பயிா்க் காப்பீடு செய்து கொள்ளுமாறு கூட்டுறவுத்துறை அறிவுறுத்தல்
Published on

விழுப்புரம் மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பயிா்க்கடன் பெற்ற விவசாயிகள், பயிா்க் காப்பீடு செய்து கொள்ளுமாறு கூட்டுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் ஏ.விஜயசக்தி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிரதமரின் பயிா்க்காப்பீட்டுத் திட்ட வழிமுறைகளின்படி 2024-25 ஆம் ஆண்டில் பயிா்க்கடன் பெற்ற மற்றும் பயிா்க்கடன் பெறும் விவசாயிகள், இந்த காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யவும், நெல் பயிருக்கு காப்பீடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதற்கானகடைசி தேதி நவம்பா் 15-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விவசாயிகளின் நலன்கருதி காப்பீடு செய்வதற்கான கடைசி தேதியாக நவம்பா் 30-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பயிா்க்கடன் பெற்ற விவசாயிகள், தங்கள் பயிருக்கு உடனடியாக காப்பீடு செய்து கொள்ள வேண்டும். இந்த வாய்ப்பை விவசாயிகள் முழுமையாகப் பயன்படுத்திட வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com