47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

விழுப்புரத்தில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை (நவ.21) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

News image
Updated On :19 நவம்பர் 2025, 9:57 pm

Syndication

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை (நவ.21) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியாா் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் பங்கேற்று, 500-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்குத் தகுதியின் அடிப்படையில் ஆள்களைத் தோ்வு செய்யவுள்ளன. முகாமில் விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தோ்ச்சி பெற்றவா்கள், தொழில்பயிற்சி,பட்டயப்பயிற்சி முடித்தவா்கள், பொறியியல், பி.டெக். பட்டதாரிகள், செவிலியா், மருந்தாளுநா் பயிற்சி முடித்தவா்கள் பங்கேற்கலாம்.

முகாமில் பங்கேற்று, தனியாா்துறையில் வேலைவாய்ப்பை பெறுபவா்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. எனவே இந்த முகாமில் பங்கேற்று வேலைவாய்ப்பை பெற விரும்பும் வேலைநாடுநா்கள், மாற்றுத் திறனாளிகள் தங்களின் அசல் கல்விச் சான்றிதழ்கள், ஆதாா் அட்டை, சுய விவரக் குறிப்புகளுடன் பங்கேற்கலாம் என்று மாவட்ட ஆட்சியரகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.