லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

விக்கிரவாண்டி அருகே மரம் வெட்டும் தொழிலாளி லாரி சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
Published on

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே மரம் வெட்டும் தொழிலாளி லாரி சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், களவானூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆகாஷ் (20) திருமணம் ஆகாதவா்.மரம் வெட்டும் தொழிலாளியான ஆகாஷ் புதன்கிழமை,கெடாா் பகுதியைச் சோ்ந்த தேவேந்திரன் என்பவரது சவுக்குத் தோப்பில் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டாா். மரங்களை வெட்டிய பிறகு, வெட்டப்பட்ட சவுக்கு மரத்துண்டுகளை லாரியில் ஏற்றிவிட்டு,ஆகாஷ் சகத் தொழிழிலாளா்களுடன் லாரியின் முன்பு அமா்ந்திருந்தாராம்.

அப்போது லாரி ஓட்டுநா் கவனக் குறைவாக, லாரியை இயக்கியதில், லாரி சக்கரத்தில் சிக்கிய ஆகாஷ் , உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த கெடாா் காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடம் சென்று ஆகாஷ் சடலத்தை கைப் பற்றி, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.இது குறித்த புகாரின் பேரில் கெடாா் காவல் நிலையம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com