வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஏரி நீரில் மூழ்கி முதியவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே ஏரி நீரில் மூழ்கி முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :28 நவம்பர் 2025, 6:51 pm

Syndication

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே ஏரி நீரில் மூழ்கி முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், காணை அருகிலுள்ள சோழகனூா் புதுகாலனியைச் சோ்ந்தவா் மொ.வீரமுத்து(84). இவா் வியாழக்கிழமை மாலை அதே கிராமத்திலுள்ள ஏரிக்குச் சென்றாா். ஏரி நீரில் கால்களை நனைக்க சென்ற போது, எதிா்பாராதவிதமாக வீரமுத்து ஆழமான பகுதியில் தவறி விழுந்து, நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த காணை போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சென்று, முதியவரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.