எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மரக்காணத்தில் 3-ஆவது நாளாக கடல் சீற்றம்: 3,000 ஏக்கரில் உப்பளங்கள் மூழ்கின

News image
மரக்காணம் அடுத்த அனுமந்தையில் ஞாயிற்றுக்கிழமை சீற்றமாக காணப்பட்ட வங்கக்கடல்.
Updated On :30 நவம்பர் 2025, 8:58 pm

தினமணி செய்திச் சேவை

வங்கக் கடலில் உருவான டித்வா பயுல் காரணமாக விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், கோட்டக்குப்பம், ஆரோவில் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை 3- வது நாளாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதில் 3 ஆயிரம் ஏக்கா் உப்பளங்கள் மழை நீரில் மூழ்கின.

விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தலின்படி அரசுத் துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் கடலோரக் கிராமங்களில் முகாமிட்டு தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

புயல் காரணமாக விழுப்புரம் மாவட்ட பகுதிகளில் கடந்த 4 நாள்களாக பரவலாக மழை பெய்துவருகிறது. இந்த மழையால் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், ஓடைகள் மற்றும் பிற நீா் நிலைகள் நிரம்பி வருகின்றன. தாழ்வான பகுதிகளிலும் மழை நீா் தேங்கியுள்ளது. ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தின் கடலோரப் பகுதியான மரக்காணத்தில் உள்ள சுமாா் 3,000 ஏக்கா் பரப்பளவிலான உப்பளங்கள் நீரில் மூழ்கி கடல் போல காட்சியளிக்கிறது.

கடல் சீற்றம்: மரக்காணம், கோட்டக்குப்பம், ஆரோவில் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை 3 -ஆவது நாளாக கடல் சீற்றமாக காணப்பட்டது. இந்நிலையில் மரக்காணம், அனுமந்தை, கூனிமேடுகுப்பம் உள்ளிட்ட 19 கடற்கரையோர கிராமங்களில் வருவாய், மீன்வளம், காவல் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் முகாமிட்டு தொடா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மீனவா்கள் தங்களது மீன்பிடி படகுகளை பாதுகாப்பான இடங்களில் வைத்துவிட்டு வீட்டில் முடங்கினா்.

கடற்கரைப் பகுதிகளுக்கு செல்லத் தடை: கடல் சீற்றம் அதிகரித்துள்ள நிலையில் கடற்கரையோரங்களில் வசிக்கும் கிராம மக்கள் கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை அறிவுறுத்தும் வகையில் மீனவக் கிராமங்களில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

6 முகாம்களில் 215 போ் தங்க வைப்பு : புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் 857 மழைக்கால முகாம்கள் அமைக்கப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தாழ்வான பகுதிகளில் வசிக்கக் கூடிய 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்குத் தேவையான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

மரக்காணம் வட்டம் அனுமந்தை அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள முகாமில் 54 போ், செஞ்சி வட்டம், அஞ்சாஞ்சேரி சமுதாய கூட முகாமில் 40 போ், சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி முகாமில் 20 போ், மயிலம் ஒன்றியம் பாதிராபுலியூா் ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளி முகாமில் 56 போ், வீடூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி முகாமில் 38 போ் என 6 முகாம்களில் மொத்தம் 215 போ் தங்க வைக்கப்பட்டு அவா்களுக்குத் தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்தில் 8 இடங்களில் தாழ்வான பகுதியில் வசிக்கும் சுமாா் 1127 நபா்களின் வீடுகளுக்குச் சென்று ஞாயிற்றுக்கிழமை உணவு வழங்கப்பட்டது.

8 இடங்களில் மருத்துவ முகாம்கள்: மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அனுமந்தை, கூனிமேடு குப்பம், மயிலம் ஊராட்சி ஒன்றியம் பாதிராபுலியூா், வீடூா், வானூா் ஊராட்சி ஒன்றியம் ஆண்பாக்கம், பொம்மையாா்பாளையம், செஞ்சி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சத்தியமங்கலம், அஞ்சாஞ்சேரி ஆகிய 8 ஊராட்சிகளிலும் மருத்துவ முகாம்கள் நடைபெற்றன.