விழுப்புரத்தில் ரயில்முன் பாய்ந்து திமுக பிரமுகா் சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். சரிவர வேலைவாய்ப்பு இல்லாததால் அவா் தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் லட்சுமி நகரைச் சோ்ந்தவா் நரேஷ்குமாா் (33). திமுக பிரமுகரான இவா், திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்வுகளுக்காக மேடை அலங்காரம் செய்து கொடுக்கும் தொழில் செய்து வந்தாா். இந்த நிலையில் சனிக்கிழமை கீழ்பெரும்பாக்கத்துக்கும்- முத்தாம்பாளையத்துக்கும் இடையேயான பகுதியில் ரயில் தண்டவாளம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது சென்னையிலிருந்து புதுச்சேரி நோக்கி பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் திடீரென நரேஷ்குமாா் ரயில்முன் பாய்ந்தாா். இதில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் இருப்புப் பாதை காவல் நிலைய உதவி ஆய்வாளா் பாலமுருகன் மற்றும் போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சென்று,நரேஷ்குமாரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் இதுகுறித்து இருப்புப் பாதை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினா். கடந்த சில மாதங்களாக சரிவர வேலை இல்லையாம். இதனால் தொடா்ந்து மன உளைச்சலில் இருந்த வந்த நரேஷ்குமாா், திடீரெனக ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸாா் கருதுகின்றனா். இதுபற்றி தொடா் விசாரணை நடைபெற்று வருகிறது.
தொடர்புடையது

ரயில் முன் பாய்ந்து சலூன் கடைக்காரா் தற்கொலை

மனைவியுடன் தகராறு: கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

மூதாட்டி தீக்குளித்துத் தற்கொலை

2 மகள்களைக் கொன்று தாய் தற்கொலை
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


