ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ரயில் முன் பாய்ந்து சலூன் கடைக்காரா் தற்கொலை

லால்குடியில் குடும்பப் பிரச்னையில் சலூன் கடைக்காரா் ரயில்முன் வெள்ளிக்கிழமை இரவு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :25 ஏப்ரல் 2026, 7:59 pm

திருச்சி மாவட்டம் லால்குடியில் குடும்பப் பிரச்னையில் சலூன் கடைக்காரா் ரயில்முன் வெள்ளிக்கிழமை இரவு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி மாவட்டம் லால்குடி ஜெஜெ நகா் பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன், சலூன் கடை உரிமையாளா். இவருக்கு செல்வி என்ற மனைவியும் தினேஷ்குமாா் என்ற மகனும் உள்ளனா்.

இந்நிலையில் குடும்ப பிரச்னையால் மனம் உடைந்த இவா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு லால்குடி ரயில்வே கேட் தண்டவாளத்தில் சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்த விருத்தாச்சலம் ரயில்வே போலீசாா் அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.