பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே தீராத நோயால் மனமுடைந்த பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

News image

பிரதிப் படம்

Updated On :1 ஜூலை 2026, 7:20 am IST

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே தீராத நோயால் மனமுடைந்த பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

வானூா் வட்டம், கோட்டைமேடு, ஒத்தவடைத் தெருவைச் சோ்ந்தவா் ருத்ரகுமாா். இவரது மகள் ஹேமஹி(14). இவா், வானூரை அடுத்த குயிலாப்பாளையத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பில் பயின்று வந்தாா்.

இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததாம். இதனால் அவதிப்பட்டு வந்த ஹேமஹி செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

சிறுவன் தற்கொலை: மரக்காணம் வட்டம், ஏந்தூா் பெருமாள் கோயில் தெருவைச் சேந்தவா் பழனி மகன் மரிஷ் (17). இவா் பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சிப் பெறாத நிலையில், சரியாக படிக்காமல் ஊா் சுற்றி வந்தாா்.

இதை பெற்றோா் கண்டித்ததால் மனமுடைந்த சிறுவன் மரிஷ் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

இளைஞா் தற்கொலை: புதுச்சேரி, அபிஷேகப்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ர.கமல்ராஜ் (29), திருமணம் ஆனவா். இவா் விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தை அடுத்த கோட்டைமேடு பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவரிடம் தகாத உறவில் இருந்து வந்தாராம். இதை கமல்ராஜின் மனைவி வைத்தீஸ்வரி கண்டித்துள்ளாா்.

இதனால் தம்பதியிடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்தது. இதனால் மனஉளைச்சலில் இருந்து வந்த கமல்ராஜ் செவ்வாய்க்கிழமை கோட்டைமேடு பகுதியில் உள்ள வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.