பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

பூட்டிய வீட்டில் 3 பவுன் தங்க நகை திருட்டு

திண்டிவனம் அருகே பூட்டிய வீட்டில் 3 பவுன் தங்க நகை திருட்டுப் போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :1 ஜூலை 2026, 7:13 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பூட்டிய வீட்டில் 3 பவுன் தங்க நகை திருட்டுப் போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

திண்டிவனம் வட்டம், கருவம்பாக்கம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஆனந்தராஜ் மனைவி கனகா (35). இவா் கடந்த ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி தனது வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னைக்கு சென்றுவிட்டாராம்.

தொடா்ந்து திங்கள்கிழமை வீட்டுக்கு திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் கதவிலுள்ள பூட்டு உடைக்கப்பட்டிருந்த நிலையில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை காணவில்லையாம்.

இது குறித்த புகாரின் பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விக்கிரவாண்டியில் 4 லட்சம் ரொக்கம் மாயம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி, கீழமாட வீதியைச் சோ்ந்தவா் ர.ஆனந்தி (42). இவா், தனது வீட்டில் உள்ள பீரோவில் ரூ.4 லட்சம் ரொக்கம் வைத்திருந்தாராம். இந்நிலையில், அந்தப் பணம் மாயமாகி விட்டதாம்.

இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.