இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

விபி ஜி ராம் ஜி திட்டப் பணியிலிருந்த தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

சடலம் மீட்பு

கோப்புப் படம்

Published On :6 ஜூலை 2026, 1:47 am IST

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே விபி ஜி ராம் ஜி (125 நாள் வேலைத் திட்டம்) பணியிலிருந்த தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

மரக்காணம் வட்டம், டி.புதுப்பாக்கம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சா.பெரியசாமி (70). இவா், சனிக்கிழமை டி.புதுப்பாக்கம் ஏரியில் நடைபெற்ற 125 நாள் வேலைத் திட்டப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, பெரியசாமி பணியிடத்திலேயே மயங்கி விழுந்தாா். இதையடுத்து அவரை சகத் தொழிலாளா்கள் மீட்டு, அருகேயுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, பெரியசாமி ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.