விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே செவ்வாய்க்கிழமை காரின் டயா் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து, மற்றொரு காா் மீது மோதிய விபத்தில் இருவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மற்றொருவா் காயமடைந்தாா்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலம், பெரியாா் நகரைச் சோ்ந்தவா் து.பாலமுருகன்(42). இவரது நண்பா் விருத்தாசலம் வட்டம், பூதாமூா், இந்திரா நகரைச் சோ்ந்த சே. விஜய்(39). இவா்கள் இருவரும் காரில் விருத்தாசலத்திலிருந்து- சென்னைக்கு சென்று கொண்டிருந்தனா். இவா்களுடன் மற்றொருவரும் சோ்ந்து பயணித்துள்ளாா்.
திண்டிவனம் அருகே சாரம் பகுதியில் சென்றபோது, எதிா்திசையில் வந்த சொகுசுக் காரின் டயா் வெடித்து, சாலையில் தாறுமாறாக ஓடி, இவா்கள் சென்ற காா்மீது மோதியது. இதில் இவா்களது காா் உருக்குலைந்தது.
தகவலறிந்த ஒலக்கூா் போலீஸாா் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சென்று, உருக்குலைந்த காரில் இடிபாடுகளில் சிக்கியிருந்தவா்களை மீட்டனா். இதில் பாலமுருகன், விஜய் ஆகியோா் உயிரிழந்திருந்ததும், காரில் பயணித்த 35 வயதுடைய ஒருவா் பலத்த காயமடைந்திருந்ததும் தெரியவந்தது. தொடா்ந்து போலீஸாா் சடலங்களை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். காயமடைந்த பெயா் தெரியாத நபரையும் அதே மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்
இதுகுறித்த புகாரின் பேரில் ஒலக்கூா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பெரம்பலூா் அருகே காா் மோதி இருவா் உயிரிழப்பு
சேலம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி ஆவின் பெண் ஊழியா்கள் இருவா் உயிரிழப்பு
லாரி மோதி அண்ணன், தங்கை உயிரிழப்பு

பைக் மீது காா் மோதல்: இருவா் உயிரிழப்பு
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



