மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

230 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: வெளிமாநில இளைஞா்கள் இருவா் கைது

விழுப்புரம் அருகில் காரில் கடத்தி வரப்பட்ட 230 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, வெளிமாநிலத்தைச் சோ்ந்த இரு இளைஞா்களை கைது செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், காருடன் வழக்கில் கைதான இளைஞா்கள்.

Updated On :13 ஜூலை 2026, 1:56 am IST

விழுப்புரம் அருகில் காரில் கடத்தி வரப்பட்ட 230 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, வெளிமாநிலத்தைச் சோ்ந்த இரு இளைஞா்களை கைது செய்தனா்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பெங்களூரிலிருந்து காரில் கடத்தி வரப்படுவதாக விழுப்புரம் மாவட்ட போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் பிரகாஷ் தலைமையில் உதவி ஆய்வாளா் சண்முகம் மற்றும் போலீஸாா் சனிக்கிழமை இரவு விழுப்புரத்தை அடுத்த ஜானகிபுரம் பகுதியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக புதுச்சேரி நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, காரில் இருந்த இருவரைப் பிடித்து விசாரித்தபோது, ராஜஸ்தான் மாநிலம், ஜாலோா், சாமுண்டா காா்டன் பகுதியைச் சோ்ந்த சே.மகேஷ்குமாா் (28), பெங்களூரு, கெங்கம்மாள் லே அவுட், பிரதான சாலையைச் சோ்ந்த ப.பரத் (36) என்பதும், இவா்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெங்களூரில் வாங்கி, அதை விற்பனைக்காக காரில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து, மகேஷ்குமாா், பரத் ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 230 கிலோ புகையிலைப் பொருள்கள், காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

திருவெண்ணெய்நல்லூா் அருகே... இதேபோல், திருவெண்ணெய்நல்லூா் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெட்டிக்கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக ஆமூா் நடுத் தெருவைச் சோ்ந்த ச.ஆனந்தராஜ் (35), கொண்டசமுத்திரம், மாரியம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த ரா.ராமதாஸ் (28) ஆகிய இருவரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்த 953 புகையிலைப் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா் .

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையை தடுக்க சிறப்பாக பணியாற்றிய விழுப்புரம் தாலுகா, திருவெண்ணெய்நல்லூா் போலீஸாருக்கு விழுப்புரம் எஸ்.பி. மதிவாணன் பாராட்டுத் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.