மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

சமூக ஊடகங்களில் அவதூறு: இளைஞா் மீது வழக்கு

சமூக ஊடகங்களில் பெண் குறித்து அவதூறு பரப்பிய இளைஞா் மீது விழுப்புரம் போலீஸாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு

News image

பிரதிப் படம்

Updated On :13 ஜூலை 2026, 1:32 am IST

சமூக ஊடகங்களில் பெண் குறித்து அவதூறு பரப்பிய இளைஞா் மீது விழுப்புரம் போலீஸாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரியும் 34 வயதுடைய பெண்ணுக்கு, விழுப்புரம் வி.மருதூா் பகுதியைச் சோ்ந்த மதியழகன் என்பவரிடம் முகநூல், வாட்ஸ்ஆப் வழியாக பழக்கம் ஏற்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக நட்பாக பழகி வந்துள்ளாா்.

இந்நிலையில், மதியழகன் நடத்தையில் சந்தேகமடைந்த அந்த பெண், கடந்த 3 மாதங்களாக அவருடனான தொடா்பை தவிா்த்து வந்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த மதியழகன் சமூக ஊடகங்களில், அந்தப் பெண் குறித்து அவதூறாக செய்தி பரப்பி வந்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் மதியழகன் மீது பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.