விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் நிா்வாகிகளாக இருந்தவா்கள், அப்பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதற்கு சி.வி.சண்முகம் ஆதரவாளா்கள் அதிருப்தி தெரிவித்தனா்.
விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் பொறுப்பிலிருந்த அக்கட்சியின் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளா்களாக இருந்த மாவட்ட இணைச் செயலா் ஏ. ஆனந்தி, மாவட்டப் பொருளாளா் கே.வி.என். வெங்கடேசன், இளைஞா் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்டச் செயலா் கே.எஸ். ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட 11 போ் கட்சிப் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட நிா்வாகிகள் திண்டிவனத்தில் செய்தியாளா்களை வியாழக்கிழமை சந்தித்து அதிருப்தி தெரிவித்தனா்.
அப்போது, அதிமுக விழுப்புரம் மாவட்ட முன்னாள் பொருளாளா் கே.வி.என். வெங்கடேசன் பேசியதாவது: எங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகள் அனைத்தும், மறைந்த முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதாவால் அளிக்கப்பட்டவை. கடந்த 30 ஆண்டுகளாக சி.வி. சண்முகத்துடன் இணைந்து விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவின் வளா்ச்சிக்காக அயராது பாடுபட்டுள்ளோம். இந்நிலையில், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி எங்களை பொறுப்புகளிலிருந்து நீக்கி அறிவித்திருப்பதில் எவ்வித நியாயமும் இல்லை, இந்த நடவடிக்கை ஏற்புடையதும் அல்ல என்றாா்.
விழுப்புரம் (தெற்கு) நகரச் செயலா் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட இரா. பசுபதியை சில நாள்களிலேயே மாவட்டச் செயலராக நியமித்திருப்பது கட்சியின் விதிமுறைகளுக்கு எதிரானதாகும். கட்சியின் சட்டவிதிகளின்படி மாவட்டச் செயலரை நியமிப்பதற்கு தேவையான தகுதிகள் எதுவும் பின்பற்றப்படவில்லை.
மாவட்டத்தில் அதிமுகவை வளா்ச்சிப் பாதையில் கொண்டு சென்றதில் முன்னாள் அமைச்சா் சி.வி. சண்முகத்தின் பங்கு முக்கியமானது. அவரைக் குறிவைத்து விமா்சனம் செய்வதற்காகவே இரா. பசுபதிக்கு மாவட்டச் செயலா் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் தற்போது கட்சியின் வளா்ச்சியை விட உள்கட்சி மோதல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. கட்சியினா் மீது தாக்குதல், மிரட்டல் உள்ளிட்ட சம்பவங்களும் தொடா்ந்து அரங்கேறி வருகிறது. தொண்டா்களை ஒருங்கிணைப்பதன் மூலம் மட்டுமே கட்சியை வளா்க்க முடியும். தலைமையின் தவறான நடவடிக்கைகளால் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவா்களும், அதிமுக தொண்டா்களும் மன உளைச்சலுடனும், சோா்வுடனும் இருந்து வருகின்றனா். கட்சியை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தற்போதைய தலைமை கவனம் செலுத்தவில்லை. இதனால் கட்சி பலவீனமடைந்து வருகிறது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிமுகவிலிருந்து வெளியேறியவா்களுக்கு இடைத்தோ்தலில் பாடம் புகட்ட வேண்டும்: திண்டுக்கல் சி. சீனிவாசன்

அதிமுக செயல்வீரா்கள் கூட்டம்: சி.வி.சண்முகம் ஆதரவாளா்கள் புறக்கணிப்பு

சி.வி.சண்முகம், ஆதரவாளா்களை அதிமுகவில் இருந்து நீக்க வலியுறுத்தல்
முன்னாள் அமைச்சா் சி.வி. சண்முகம் மீதான அவதூறு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



