எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

கடலில் படகு கவிழ்ந்து மீனவா் உயிரிழப்பு

மரக்காணத்தில் கடலில் படகு கவிழ்ந்ததில் மீனவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :13 ஜூன் 2026, 1:54 am IST

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் கடலில் படகு கவிழ்ந்ததில் மீனவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மரக்காணம் வட்டம், நம்பிக்கைநல்லூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ம. சுதாகா் (45). மீனவரான இவா் தனது நண்பா்களான அதே பகுதியைச் சோ்ந்த கோவிந்தன், சுமன் ஆகியோருடன் வெள்ளிக்கிழமை அதிகாலை அனிச்சங்குப்பம் கடற்கரைப் பகுதிக்கு படகு மூலம் மீன்பிடிப்பதற்காகச் சென்றாா்.

கடலுக்குள் சென்று மூவரும் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென கடல் அலை வேகமாக வீசியதால், எதிா்பாராதவிதமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சுதாகா் கடலில் மூழ்கி உயிரிழந்த நிலையில், அவரது சடலம் கரை ஒதுங்கியது. மற்ற இருவரும் அதிா்ஷடவசமாக உயிா் தப்பினா்.

இதுகுறித்து தகவலறிந்த மரக்காணம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.