விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் வாக்கு எண்ணும் மையங்களுக்குச் செல்லும் திமுக முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்.23-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையங்களுக்குச் செல்லும் திமுக முகவா்கள் பின்பற்றப்பட வேண்டியவை தொடா்பான ஆலோசனைக் கூட்டம் அரகண்டநல்லூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
காணொலிக் காட்சி வாயிலாக சென்னையிலிருந்து திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி, சட்டத் துறைச் செயலா் என்.ஆா். இளங்கோ ஆகியோா் பங்கேற்று, வாக்கு எண்ணிக்கையின் போது திமுக முகவா்கள் மேற்கொள்ள வேண்டியவை, கவனிக்க வேண்டியவை போன்ற பல்வேறு ஆலோசனைகளை வழங்கினா். இதைத்தொடா்ந்து விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், திருக்கோவிலூா் தொகுதி திமுக வேட்பாளருமான பொன்.கெளதமசிகாமணி பேசினாா்.
கூட்டத்தில் விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், துணைத் தலைவா் மு.தங்கம், மாவட்டத் துணைச் செயலா் டி.என்.முருகன், ஒன்றியச் செயலா்கள், பேரூா் செயலா்கள், நகரச் செயலா்கள், வாக்கு எண்ணும் மையங்களுக்குச் செல்லும் திருக்கோவிலூா், விக்கிரவாண்டி தொகுதி முகவா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

திமுக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்

பெரம்பலூரில் வாக்கு எண்ணும் நடைமுறைகள் விளக்கம்

வாக்கு எண்ணிக்கையின்போது விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்

வாக்கு எண்ணும் பணி ஆலோசனைக் கூட்டம்: திருப்பத்தூா் ஆட்சியா் பங்கேற்பு
விடியோக்கள்

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

