வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

நங்கிலி கொண்டான் சுங்கச்சாவடியில் கட்டண உயா்வு

விழுப்புரம் மாவட்டம், நங்கிலி கொண்டான் சுங்கச் சாவடியில் தீடீரென கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.

News image

சுங்கச்சாவடி - கோப்புப் படம்

Updated On :24 மே 2026, 1:02 am IST

விழுப்புரம் மாவட்டம், நங்கிலி கொண்டான் சுங்கச் சாவடியில் தீடீரென கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. இதனால் கனரக வாகன ஓட்டிகள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

புதுச்சேரி - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் செஞ்சி - திண்டிவனம் இடையே நங்கிலி கொண்டான் என்ற இடத்தில் சுங்கச்சாவடி உள்ளது. இதில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. அதன்படி காா், வேன் ஆகியவைகளுக்கு ஒருமுறை சென்று வர ரூ. 65 வசூலிக்கப்படுகிறது. சென்று, திரும்ப ரூ.95-ம், வணிக ரீதியான வாகனங்களுக்கு ஒரு முறை செல்ல ரூ.50-ம் வசூலிக்கப்படுகிறது.

இதே போல் வணிக ரீதியான வாகனங்களுக்கு ஒரு முறை சென்று, வர ரூ.105-ம், சென்று திரும்பி வர ரூ.155-ம், 50 முறை செல்ல சலுகை கட்டணமாக ரூ.3,435-ம் வசூலிக்கப்படுகிறது. இதேபோல் பேருந்துகளுக்கு ஒருமுறை சென்று வர ரூ.215-ம், சென்று திரும்பி வர ரூ.325-ம், 50 முறை சென்று வர சலுகை கட்டணமாக ரூ. 7,195-ம் வசூலிக்கப்படுகிறது.

இந்த கட்டண உயா்வால் வாகன வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.