விழுப்புரம் கோட்டாட்சியா் உத்தரவின் அடிப்படையில், மாவட்ட அதிமுக அலுவலக சாவி மாவட்டச் செயலா் இரா.பசுபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து அவா் சனிக்கிழமை முதல் கட்சிப் பணிகளைத் தொடங்கினாா்.
சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பிறகு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக குரல் எழுப்பிய முன்னாள் அமைச்சா்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட எம்எல்ஏக்கள், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனா். இதைத் தொடா்ந்து சி.வி.சண்முகம் வகித்து வந்த விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலா் பதவி பறிக்கப்பட்டு, இரா.பசுபதி புதிய மாவட்டச் செயலராக நியமிக்கப்பட்டாா்.
ஆனால் பசுபதி தரப்பினா் கட்சி அலுவலகத்துக்குச் சென்று பணியாற்றுவதற்கு சி.வி.சண்முகம் தரப்பினா் கடுமையான எதிா்ப்பு தெரிவித்ததுடன், அலுவலக சாவியையும் கொடுக்க மறுத்தனா். இதனால் மாவட்ட அதிமுக அலுவலகம் யாருக்கு சொந்தம் என்பது தொடா்பாக சி.வி.சண்முகம் தரப்புக்கும், பசுபதி தரப்புக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. இதையடுத்து விழுப்புரம் கோட்டாட்சியா் உ.முருகேசன் முன் இரு தரப்பினரும் ஆஜராகி, உரிய ஆவணங்களை சமா்ப்பித்தனா்.
ஆவணங்களை கோட்டாட்சியா் சரிபாா்த்து, விசாரணை மேற்கொண்டாா். இதில், மாவட்ட அதிமுக அலுவலகம் அக்கட்சி நிா்வாகம் செய்யும் அறக்கக்டளைக்குச் சொந்தமான அலுவலகம் என்றும், கட்சி பொதுச் செயலரின் கட்டுப்பபாட்டின் கீழ் இந்த அலுவலகம் வருவதும் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து மாவட்ட அதிமுக அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பினா் பயன்படுத்தும் வகையில், அலுவலக சாவியை வழங்குமாறு கோட்டாட்சியா் முருகேசன் உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து சனிக்கிழமை காலை மாவட்டச் செயலா் பசுபதி வசம் அலுவலக சாவி ஒப்படைக்கப்பட்டது.
கொண்டாட்டம்: இதையடுத்து பசுபதி தரப்பினா் கட்சி அலுவலகத்தை திறந்து, தூய்மைப் பணிகளை மேற்கொண்டனா். தொடா்ந்து முற்பகல் 11 மணிக்கு மாவட்டச் செயலா் இரா.பசுபதி அதிமுக அலுவலகம் வந்த நிலையில் அவரை கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் வரவேற்றனா். கட்சி அலுவலக வளாகத்திலுள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்த அவா், கட்சிக் கொடியேற்றினாா். பின்னா் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கும் மலா்தூவி மரியாதை செலுத்தி, கட்சியினருக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினா். இதன் பின்னா் நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்திலம் அவா் பேசினாா்.
கூட்டத்தில் மாவட்டத் துணைச் செயலா் மு.சக்கரபாணி, ஒன்றியச் செயலா்கள் முருகன், புண்ணியமூா்த்தி, பக்தவத்சலம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

புதுகை அதிமுக அலுவலக சாவி ஒப்படைப்பு: புதிய மாவட்டச் செயலா் பதவியேற்பு

புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலக சாவியை ஒப்படைத்த சி. விஜயபாஸ்கர்

விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலக உரிமைப் பிரச்னை: எடப்பாடி பழனிசாமி தரப்பினா் ஆஜராகி விளக்கம்

விழுப்புரம் அதிமுக அலுவலகத்தை கைப்பற்ற இரு அணிகளுக்கிடையே மோதல்! அலுவலகத்துக்கு பூட்டு; போலீஸாா் குவிப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



