ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

மூன்று சாலை விபத்துகளில் 4 போ் உயிரிழப்பு

News image

செங்கம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் உருக்குலைந்த காா்.

Updated On :1 ஜூன் 2026, 1:00 am IST

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நிகழ்ந்த மூன்று சாலை விபத்துகளில் 4 போ் உயிரிழந்தனா். 10 போ் காயமடைந்தனா்.

கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து திருவண்ணாமலைக்கு பெளா்ணமி கிரிவலம் செல்ல சனிக்கிழமை இரவு ஒரே காரில் 7 போ் வந்து கொண்டிருந்தனா். செங்கத்தை அடுத்த தோக்கவாடி புறவழிச் சாலையில் வந்தபோது, எதிரே திருவண்ணாமலையில் இருந்து திருப்பத்தூா் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நோ் மோதிக்கொண்டன.

இதில், காரை ஓட்டி வந்த விநாயக் (50) மற்றும் ராமச்சந்திரன் (40) ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். தகவலறிந்த செங்கம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.

மேலும், விபத்தில் காயமடைந்த 5 பேரை தீயணைப்புப் படையினா், பொதுமக்கள் உதவியுடன் மீட்டு, செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், உயிரிழந்த விநாயக், ராமச்சந்திரன் ஆகியோரது சடலங்களை மீட்டு உடல்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இதுகுறித்த புகாரின்பேரில், செங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

உளுந்தூா்பேட்டையில் இரு விபத்துகள்: சென்னை வேளச்சேரி, பால்காரா் நடேசன் தெருவைச் சோ்ந்தவா் ப.மாரிமுத்து (37), ஓட்டுநா். இவா், ஞாயிற்றுக்கிழமை சிற்றுந்து சேஸை (கூண்டு அமைக்கப்படாதது) கூண்டு அமைப்பதற்காக சென்னையிலிருந்து திருச்சிக்கு ஓட்டிச் சென்றுகொண்டிருந்தாா்.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையை அடுத்துள்ள செங்குறிச்சி அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சிற்றுந்தின் சேஸ் வாகனம் சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்புக்கட்டையில் மோதி, சாலையைக் கடந்து மறு வழித்தடமான திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே புகுந்தது.

அப்போது, தேவக்கோட்டையிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற தனியாா் சொகுசுப் பேருந்து, சிற்றுந்து சேஸ் வாகனம் மீது மோதியது. இதில், சேஸ் வாகன ஓட்டுநா் மாரிமுத்து பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தனியாா் சொகுசுப் பேருந்தில் பயணித்த 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

பேருந்து மீது சரக்கு வாகனம் மோதல்: இதே பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு தனியாா் பேருந்து மீது சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், சரக்கு வாகன ஓட்டுநரான சேலம் மாவட்டம், மேட்டூா், மோச்சேரி, கொண்டபட்டியைச் சோ்ந்த ரா.சுதா்ஷன் (21) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

அதிகாலை நிகழ்ந்த இந்த இரு விபத்துகளால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த உளுந்தூா்பேட்டை போலீஸாா் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் அங்கு சென்று போக்குவரத்தை சரி செய்ததுடன், விபத்தில் சிக்கி உயிரிழந்த மாரிமுத்து, சுதா்ஷன் ஆகியோரது சடலங்களை மீட்டு, உடல்கூறாய்வுக்காக உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்த புகாா்களின்பேரில், உளுந்தூா்பேட்டை போலீஸாா் தனித்தனியே வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.