98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

மாணவியின் ஆங்கிலக் கவிதை புத்தகம் வெளியீடு

நெய்வேலி, ஏப். 15: நெய்வேலியைச் சேர்ந்த மாணவி சிந்துஜா எழுதிய ஆங்கிலக் கவிதைப் புத்தகத்தை மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ திங்கள்கிழமை கடலூரில் வெளியிட்டார். நெய்வேலி இந்திராநகரைச் சேர்ந்த ஆனந்தன் - ஜ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:22 am

நெய்வேலி, ஏப். 15: நெய்வேலியைச் சேர்ந்த மாணவி சிந்துஜா எழுதிய ஆங்கிலக் கவிதைப் புத்தகத்தை மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ திங்கள்கிழமை கடலூரில் வெளியிட்டார். நெய்வேலி இந்திராநகரைச் சேர்ந்த ஆனந்தன் - ஜெயராணி தம்பதியினரின் மகள் சிந்துஜா. இவர் கடலூர் அக்ஷரா வித்யாலய பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வருகிறார். சுற்றுச்சூழல் குறித்து ""ஒன் ஆப் எ கைன்டு' என்ற பெயரில் 53 தலைப்புகளில் கவிதைகளை எழுதியுள்ளார். இப்புத்தக வெளியீட்டு விழா கடலூர் கிரியேட்டிவ் கிட்ஸ் அமைப்பு சார்பில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ முதல் பிரதியை வெளியிட மாவட்ட எஸ்பி பிரதீப்குமார் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் துணைவியார் மணிஷா, மாணவியின் இளம் வயது திறனை பாராட்டி நினைவுப் பரிசை வழங்கினார். முன்னதாக விழாவில் நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரி பேராசிரியர் தியாகராஜன் வரவேற்றார். நெய்வேலி தாகூர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் சந்திரசேகரன், கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேநிலைப்பள்ளி முதல்வர் நடராஜன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கவிதை புத்தகத்தை மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ வெளியிட முதல் பிரதியை பெற்றுக் கொள்கிறார் மாவட்ட எஸ்பி பிரதீப்குமார். உடன் மாணவி சிந்துஜா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.