புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

சிதம்பரத்தில் ஆக.27-31ல் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா!

சிதம்பரம் பெரியார் தெரு ஸ்ரீமத் ராமானுஜர் பஜனை மடத்தில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி 97-வது ஆண்டு இசை விழா ஆக.27-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெறுகிறது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2013, 8:07 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் பெரியார் தெரு ஸ்ரீமத் ராமானுஜர் பஜனை மடத்தில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி 97-வது ஆண்டு இசை விழா ஆக.27-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெறுகிறது.

ஆக.27 செவ்வாய்க்கிழமை: மங்கலஇசை, கிருஷ்ணவிஜயம் நிகழ்ச்சி, சிவகாமி மகளிர் பஜனை மன்றத்தினரின் கோலாட்டம், ஸ்ரீநந்தி மிருதங்க வித்தியாலயா மாணவ, மாணவியர்களின் தாளவாத்தியம், வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம்; ஆக.28 புதன்கிழமை: கோவை செல்வி என்.பத்மபிரியா அபங்கம் பஜன் நிகழ்ச்சி, ஆயிரம் வைசிய மஞ்சபுத்தூர் சிவகாமி மகளிர் பஜனை மன்றத்தினரின் இசைநிகழ்ச்சி, பத்மஸ்ரீ நாட்டியாலயா பள்ளி நிறுவனர் தஞ்சை ஏ.வடிவுதேவி குழுவினரின் பரதநாட்டியம்; ஆக.29 வியாழக்கிழமை: செல்வி பி.வி.ஹர்ஷினி பாட்டு, முனைவர் ஆர்.எழில்ராமன் குழுவினரின் இன்னிசை, சிதம்பரம் சித்ரா ஆர்ட் மற்றும் கல்சுரல் அகாதெமி மாணவ, மாணவியர்களின் பரதநாட்டியம்; ஆக.30 வெள்ளிக்கிழமை: ஸ்ரீகான கலாமாமணி குன்னக்குடி எஸ்.லெங்கடரத்தினம் குழுவினரின் பாட்டு நிகழ்ச்சி, ஸ்ரீராஜகணபதி மிருதங்க வித்தியாலயா மாணவர்களின் இன்னிசை நிகழ்ச்சி, பி.எம்.பாண்டமங்கலம் கிருஷ்ணகுமார் குழுவினரின் நாதசங்கமம் நிகழ்ச்சி; ஆக.31 சனிக்கிழமை: விடையாற்றி உற்சவம், குன்னக்குடி எஸ்.வெங்கடரத்தினம் குழுவினரின் பாட்டு மற்றும் இசைகலைஞர்கள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சிகள். விழா ஏற்பாடுகளை ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழாக்குழுத் தலைவர் குன்னக்குடி எஸ்.வெங்கடரத்தினம் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.