ஹோட்டல் உரிமையாளரிடம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(31). ஹோட்டல் உரிமையாளர். கடலூர் முதுநகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு மனைவி மற்றும் குழந்தையோடு வந்திருந்தார். இந்நிலையில் புதன்கிழமை மாலை புதுச்சேரி சென்றுவிட்டு தனியார் பஸ்சில் கடலூருக்கு வந்து கொண்டிருந்தனர்.
ஓட்டநர் சீட்டுக்கு பின்புறமுள்ள இருக்கையில் சுரேஷ்குமாரின் மனைவி கைக்குழந்தையுடன் அமர்ந்திருந்தார். அவரது இருக்கையின் கீழ் தனது பேக்கை வைத்திருந்தார். கடலூர் பஸ் நிலையத்தில் இறங்கியபோது, பேக்கின் ஜிப் திறந்த நிலையில் இருந்தது தெரியவந்தது. மேலும் அதிலிருந்த 4.19 கிராமுள்ள வைர தோடு, முக்கால் பவுன் செயின், 3 கிராம் மோதிரம் ஆகிய நகைகள் காணாமல் போயிருந்தது.
இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து நகை திருடியவர்களை தேடிவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் செய்திகள் - நேரலை!

மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!

இன்று யாருக்கு சாதகம்? தினப்பலன்கள்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

