மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

அன்னையர் தினக் கொண்டாட்டம்

சிதம்பபம் ஆர்.கே.ஜி. பவுன்டேஷன் மற்றும் வின்சாஃப்ட் கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனம் இணைந்து அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சியை மாலைக்கட்டித்தெரு

Updated On :13 மே 2013, 12:27 am IST

சிதம்பபம் ஆர்.கே.ஜி. பவுன்டேஷன் மற்றும் வின்சாஃப்ட் கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனம் இணைந்து அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சியை மாலைக்கட்டித்தெரு ஆறுமுகநாவலர் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடத்தியது.

நிகழ்ச்சியில், பயிற்சி நிறுவன மாணவ, மாணவிகள் அன்னைக்கு பாதபூஜை செய்து வழிபட்டனர். நகரமன்றத் தலைவர் நிர்மலாசுந்தர் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். மேலும் அன்னையர்களுக்கு நினைவுப் பரிசுகளை அவர் வழங்கினார். நகரமன்ற துணைத் தலைவர் ரா.செந்தில்குமார் முன்னிலை வகித்து இலவச கணினிப் பயிற்சி பெற்ற 50 பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

ஆர்.கே.ஜி. பவுன்டேஷன் தலைவர் நிர்மலா கோதண்டராமன் வரவேற்றார். ரபியாபேகம், சித்ரா ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.

சிதம்பரம் தகதிமிதா கலைக்குழு மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. வேதா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். பொருளர் கௌரி கோதண்டராமன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார். ஹேமலதா நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.