கடலூர் அரசு பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் வழங்கும் பணி தொடங்கியது.
கடலூர் அரசு பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை, இளம் அறிவியல் மற்றும் இளம் வணிகவியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த 9-ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. கடந்த 11-ம் தேதி வரை 400 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன.
இது குறித்து கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் கூறுகையில், "விண்ணப்பங்கள் கடந்த 9-ம் தேதி முதல் வரும் 30-ம் தேதி வரை வழங்கப்படுகிறது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 14-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பத்தின் விலை ரூ.27. எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் தங்களின் ஜாதிச் சான்றிதழின் அசல் மற்றும் நகலைக் காண்பித்து ஒரு விண்ணப்பம் மட்டுமே இலவசமாகப் பெறலாம். கூடுதலாக தேவைப்படும் விண்ணப்பத்துக்குப் பணம் செலுத்த வேண்டும். மற்ற வகுப்பினர் விண்ணப்பத்துக்குரிய பணத்தை செலுத்தி பெறலாம்.
கடந்தாண்டு 6,000 விண்ணப்பங்கள் வரை விற்பனையாயின. இந்தாண்டு முதல் கட்டமாக 5,000 விண்ணப்பம் வரை அச்சிடப்பட்டுள்ளது. கூடுதலாக தேவைப்ப டும் பட்சத்தில் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு வழங்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பைக் மீது பேருந்து மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி!

சிஎஸ்கேவின் பிளே - ஆஃப் வாய்ப்பைத் தீர்மானிக்கும் பஞ்சாப் - ஆர்சிபி போட்டி!

தில்லியில் சிஎன்ஜி விலை மீண்டும் உயர்வு: ஒரே வாரத்தில் இரண்டாவது முறை

தேர்தலில் போட்டியிட்டு இருந்தால் 100% வெற்றி பெற்றிருப்பேன்: ரஜினிகாந்த்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
