குதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

சிதம்பரம் இந்தியன் வங்கியில் தீ விபத்து

சிதம்பரம் இந்தியன் வங்கியில் சனிக்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு மீட்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

Updated On :13 மே 2013, 12:46 am IST

சிதம்பரம் இந்தியன் வங்கியில் சனிக்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு மீட்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

சிதம்பரத்தில் நகைக் கடைகள் நிறைந்தப் பகுதியான காசுகடைத் தெருவில் உள்ள இந்தியன் வங்கிக் கிளையில் சனிக்கிழமை இரவு 11 மணிக்கு திடீரென வங்கி அலாரம் ஒலித்தது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்து, வங்கி முன்பு திரண்டு சிதம்பரம் நகர காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீஸார் வங்கி அதிகாரிகளை அழைத்து கதவை திறந்தபோது வங்கியின் முதல் மாடியில் தீப்பற்றியது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் தீயணைப்பு மீட்புத் துறையினர் நிலைய அலுவலர் ஜகாங்கீர் முகமது தலைமையில் விரைந்து சென்று வங்கி முதல் மாடியில் உள்ள சர்வர் அறையிலிருந்து புகை வருவதைக் கண்டறிந்து மின்சப்ளையைத் துண்டித்து அங்குள்ள ஏர்கண்டிஷன் மிஷின் தீப்பிடித்து எரிந்ததை தடுத்து அணைத்தனர்.  அலாரம் அடித்ததால் வங்கியில் தீப்பிடித்தது தெரியவந்து, உடனடியாக தீ அணைக்கப்பட்டதால், வங்கியில் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.