சிதம்பரம் இந்தியன் வங்கியில் சனிக்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு மீட்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
சிதம்பரத்தில் நகைக் கடைகள் நிறைந்தப் பகுதியான காசுகடைத் தெருவில் உள்ள இந்தியன் வங்கிக் கிளையில் சனிக்கிழமை இரவு 11 மணிக்கு திடீரென வங்கி அலாரம் ஒலித்தது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்து, வங்கி முன்பு திரண்டு சிதம்பரம் நகர காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸார் வங்கி அதிகாரிகளை அழைத்து கதவை திறந்தபோது வங்கியின் முதல் மாடியில் தீப்பற்றியது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் தீயணைப்பு மீட்புத் துறையினர் நிலைய அலுவலர் ஜகாங்கீர் முகமது தலைமையில் விரைந்து சென்று வங்கி முதல் மாடியில் உள்ள சர்வர் அறையிலிருந்து புகை வருவதைக் கண்டறிந்து மின்சப்ளையைத் துண்டித்து அங்குள்ள ஏர்கண்டிஷன் மிஷின் தீப்பிடித்து எரிந்ததை தடுத்து அணைத்தனர். அலாரம் அடித்ததால் வங்கியில் தீப்பிடித்தது தெரியவந்து, உடனடியாக தீ அணைக்கப்பட்டதால், வங்கியில் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்ஸ்டாவில் பழகி 14 வயது சிறுவனுடன் 40 வயது பெண்மணி திருமணம்! -போலீஸில் புகார்
போர்நிறுத்த ஒப்பந்தம் உடனடியாக கையெழுத்தாகாது: ஈரான்

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!
நடிகர் மம்மூட்டிக்கு கௌரவ டாக்டர் பட்டம்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


