இசையமைப்பாளர் தேவா காலமானார்!டாஸ்மாக் கடைகளில் விரைவில் 4 புதிய பீர் வகைகள்! விலை விவரம்!வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கினால்... அடுக்கடுக்கான குளறுபடிகள்! மக்கள் கேள்விஇன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

சாயத் தொழிற்சாலைக்கு எதிராகப் போராட்டம்: 1,000 பேர் கைது

சிதம்பரம் அருகே பெரியப்பட்டு கிராமத்தில் அமைக்கப்படும் தனியார் சாயத்தொழிற்சாலையை தடை செய்யக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் தலைமையில் போராட்டம் நடத்திய ஆயிரம் பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

Updated On :

சிதம்பரம் அருகே பெரியப்பட்டு கிராமத்தில் அமைக்கப்படும் தனியார் சாயத்தொழிற்சாலையை தடை செய்யக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் தலைமையில் போராட்டம் நடத்திய ஆயிரம் பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

 இக் கிராமத்தில் தனியார் சாயத்தொழிற்சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இதனால் மண் வளம் பாதிக்கப்பட்டு விவசாயம், குடிநீர் பாதிக்கப்படும் என்பதால் அத் தொழிற்சாலைக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி பெரியப்பட்டு, ஆண்டார்முள்ளிப்பள்ளம், வாண்டையாம் பாளையம், தச்சம்பாளையம் உள்ளிட்ட சுமார் 20 கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இந்நிலையில் இத் தொழிற்சாலைக்கு எதிராக தவாக மற்றும் மக்கள் வாழ்வாதார இயக்கம் சார்பில் முற்றுகை போராட்டம் தவாக நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

 அப்போது தி.வேல்முருகன் பேசியது: 1980இல் கடலூரில் சிப்காட் தொடங்கப்பட்டு குடிநீர், கடல்வளம் பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்கள் ஏற்பட்டுள்ளன.

 தற்போது இங்கு 10 தொழிற்சாலைகள் உள்ளன. இந்நிலையில் சிப்காட் விரிவாக்கம்- 3 உருவாக்கப்பட்டு கடலூரிலிருந்து சிதம்பரம் அருகே பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள் வரை நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு, கடல்நீர் உட்புகுந்து மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடலிலிருந்து 10 கி.மீட்டர் தூரத்திற்கு அப்பால்தான் தொழிற்சாலை நிறுவ வேண்டும் என அரசாணை உள்ளது. ஆனால் அரை கி.மீட்டர் தூரத்தில் இத்தொழிற்சாலை அமைக்கப்படுகிறது.

 கடலூர் மாவட்டம் பெரியப்பட்டு சாயத்தொழிற்சாலையினால் ஏற்படும் பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் குழு அமைத்து ஆராய்ந்து, அத்தொழிற்சாலை அமைக்க தடை விதிக்க வேண்டும் என்றார் தி.வேல்முருகன்.

 போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் மு. முடிவண்ணன், கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ரா.பஞ்சமூர்த்தி, மேற்கு மாவட்டச் செயலாளர் நா.சின்னதுரை, தலைமை நிலையச் செயலாளர் கனல் உ.கண்ணன், மூத்த நகர்மன்ற உறுப்பினர் ஆ.ரமேஷ், மீனவர் வாழ்வுரிமை இயக்கம் ஏகாம்பரம், மாநில மாணவரணி தலைவர் ரவி.பிரகாஷ்., ஒன்றியச்செயலாளர் ச.கோபு, தில்லை கோ.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 பின்னர் போராட்டத்தினர் ஊர்வலமாக  சாயத்தொழிற்சாலையை முற்றுகையிட சென்ற போது சிதம்பரம் டிஎஸ்பி எஸ்.சுந்தரவடிவேலு

தலைமையிலான போலீஸார் வழிமறித்து தடுத்து நிறுத்தி கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட தவாக தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்ட ஆயிரம் பேரை போலீஸார் கைது செய்து சிலம்பிமங்கலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.