கனமழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!கனமழை: நீலகிரியில் 6 தாலுகாக்களில் இன்று (அக். 24) பள்ளிகளுக்கு விடுமுறை!தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

கடலூர் சிறைச்சாலையில் அங்காடி திறக்கும் பணி: ஏடிஜிபி ஆய்வு

கடலூர் கிளைச்சிறையில் சிறையில் உற்பத்தியாகும் பொருள்களை விற்பதற்கு அங்காடி அமைப்பதற்கான பணிகளை சிறைத்துறை ஏடிஜிபி திரிபாதி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.

Updated On :

கடலூர் கிளைச்சிறையில் சிறையில் உற்பத்தியாகும் பொருள்களை விற்பதற்கு அங்காடி அமைப்பதற்கான பணிகளை சிறைத்துறை ஏடிஜிபி திரிபாதி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.

தமிழக சிறைகளில் நன்னடத்தை கைதிகள் உற்பத்தி செய்யும் கைவினைப் பொருள்கள், உணவுப் பொருள்கள் அந்தந்த சிறைகளின் முன்பாக சிறைத் துறையால் அங்காடிகள் அமைத்து, அதன் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதேபோல், கடலூர் மத்திய சிறைக்குள்ளிருக்கும் கைதிகள் இனிப்பு, கார வகைகள் தயாரித்து விற்பனை செய்கின்றனர். மத்திய சிறையானது ஊருக்கு ஒதுக்குபுறமாக இருப்பதால் பொதுமக்களால் எளிதில் சென்று வர முடியவில்லை.

எனவே நகரின் மையப்பகுதியில் கடலூர் பழைய மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள கிளைச்சிறையில் அங்காடி தொடங்க சிறைத்துறை திட்டமிட்டது. இந்நிலையில், கடலூர் மத்திய சிறையில் நடைபெற்று வரும் கட்டுமானப்பணிகளை சிறைத் துறை ஏடிஜிபி திரிபாதி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து சிறை அங்காடித் திட்டம் தொடர்பாக கடலூர் கிளைச்சிறையை ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், இந்த ஆய்வுப்பணியானது வழக்கமான ஆய்வுதான். விரைவில் கடலூர் கிளைச்சிறையில் அங்காடி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கடலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) அ.ஆண்டாள் உடனிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.