திருப்பாதிரிபுலியூர் பெருமாள் கோயிலில் நாளை வைகுண்ட ஏகாதசி

நடுநாட்டுத் திருப்பதியில் ஒன்றான திருக்கோவலூர் ஸ்ரீ உலகளந்த பெருமாளின் அபிமான ஸ்தலமும், கருட ஸ்தலமுமாக சிறப்புப் பெற்ற கடலூர் திருப்பாதிரிபுலியூரில் அமைந்துள்ள
Updated on
1 min read

நடுநாட்டுத் திருப்பதியில் ஒன்றான திருக்கோவலூர் ஸ்ரீ உலகளந்த பெருமாளின் அபிமான ஸ்தலமும், கருட ஸ்தலமுமாக சிறப்புப் பெற்ற கடலூர் திருப்பாதிரிபுலியூரில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா வெள்ளிக்கிழமை (டிச. 29) அதிகாலை நடைபெறுகிறது.
 இந்தக் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பாவை சாற்றுமுறையும், 5 மணியளவில் ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக வரதராஜப்பெருமாள் நம்மாழ்வார் எதிர்சேவையில் பரமபதவாசல் திறப்பும் நடைபெறுகிறது.
 தொடர்ந்து, சனிக்கிழமை (டிச. 30) காலை 7 மணிக்கு தங்க கருட சேவையும், வீதி புறப்பாடும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ப.முத்துலட்சுமி, தக்கார் ப.சுபத்ரா ஆகியோர் செய்து வருகின்றனர்.
 இதே போல, மாவட்டத்தில் உள்ள திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயில், புதுப்பாளையம் பெருமாள் கோயில் உள்பட அனைத்து பெருமாள் கோயில்களிலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பரமபதவாசல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை (டிச. 29) நடைபெறுகிறது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com