ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அகில இந்திய கபடிப் போட்டி: ஓஎன்ஜிசி அணி வெற்றி

நெய்வேலியில் நடைபெற்ற பொதுத் துறை நிறுவனங்களுக்கான அகில இந்திய கபடிப் போட்டியில் ஓஎன்ஜிசி அணி வெற்றி பெற்றது.

News image
Updated On :21 மார்ச் 2017, 5:32 am

தினமணி

நெய்வேலியில் நடைபெற்ற பொதுத் துறை நிறுவனங்களுக்கான அகில இந்திய கபடிப் போட்டியில் ஓஎன்ஜிசி அணி வெற்றி பெற்றது.
 பொதுத் துறை நிறுவனங்களுக்கான அகில இந்திய கபடிப் போட்டி, நெய்வேலியில் மார்ச் 16 முதல் 18-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெற்றன. இதில், என்எல்சி இந்தியா நிறுவனம், ஓஎன்ஜிசி, இந்திய நிலக்கரி நிறுவனம், புதுதில்லி பிஎஸ்என்எல், ஹைதராபாத் பணியாளர் ஈட்டுறுதி காப்பீட்டு நிறுவனம் (ஈ.எஸ்.ஐ.சி), பெங்களூரு ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் ஆகிய 6 நிறுவனங்களின் அணிகள் பங்கேற்றன. அரையிறுதிப் போட்டியில் ஓஎன்ஜிசி - இந்திய நிலக்கரி நிறுவனஅணிகளும், பிஎஸ்என்எல் - ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவன அணிகளும் மோதிக்கொண்டன. இதில், ஓஎன்ஜிசி, பிஎஸ்என்எல் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. சனிக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஓஎன்ஜிசி அணி 36:21 என்ற புள்ளிகள் கணக்கில் பிஎஸ்என்எல் அணியை வென்றது. தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் என்எல்சி தலைவர் சரத்குமார் ஆச்சார்யா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற ஓஎன்ஜிசி அணிக்கு கோப்பையை வழங்கினார். இரண்டாம் இடத்துக்கான கோப்பையை பிஎஸ்என்எல் நிறுவன அணிக்கு வழங்கினார்.
 இந்திய நிலக்கரி மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனங்கள் 3}ஆம் இடத்தைப் பகிர்ந்துகொண்டன.
 கபடி போட்டித் தொடரில் சிறந்த ரைடராகத் தேர்வு செய்யப்பட்ட ஓஎன்ஜிசி அணியின் மன்பிரித் சிங்குக்கும், சிறந்த கேச்சராக தேர்வு செய்யப்பட்ட பிஎஸ்என்எல் அணியின் ஸ்ரீனிவாஸýக்கும், ஒட்டு மொத்த அளவில் சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்ட ஓஎன்ஜிசி அணியின் ஜஸ்பிர் சிங் ஆகியோருக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.
 நிகழ்ச்சியில் நிறுவன இயக்குநர்கள் சுபிர்தாஸ், வி.தங்கபாண்டியன், ஆர்.விக்ரமன், தலைமைப் பொது மேலாளர் ஆர்.மோகன், துணைத் தலைமைப் பொது மேலாளர் ஐ.நெடுமாறன், தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கத் துணைத் தலைவர் ஏ.ஆர்.வேலவன் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.