நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற சார்பு-நீதிபதி உத்தரவு

பண்ருட்டி, செட்டிப்பட்டறை ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு சார்பு-நீதிபதி ரேவதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News image
Updated On :21 மார்ச் 2017, 5:46 am

தினமணி

பண்ருட்டி, செட்டிப்பட்டறை ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு சார்பு-நீதிபதி ரேவதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
 தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பண்ருட்டி செட்டிப்பட்டறை ஏரியில் உள்ள சீமைக் கருவேல மரங்களை பொதுப்பணித் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் திங்கள்கிழமை அகற்றினர். இந்தப் பணியை பண்ருட்டி சார்பு-நீதிபதி ரேவதி தொடக்கி வைத்தார்.
 அப்போது, சுமார் 160 ஏக்கர் பரப்பளவு கொண்ட செட்டிப்பட்டறை ஏரியானது தற்போது 25 ஏக்கராகச் சுருங்கியதும், ஏரியின் ஏனைய பகுதிகள் அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதும் தெரியவந்தது.
 இதையடுத்து சார்பு-நீதிபதி ரேவதி கூறுகையில், சீமைக் கருவேல மரங்களை வேரோடு அகற்ற வேண்டும். அதேநேரத்தில் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கும்படி வருவாய்த் துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கமலக்கண்ணன், குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் சரவணபாபு, கணேசன், வட்டாட்சியர் விஜய்ஆனந்த், பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் எஸ்.குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.