பண்ருட்டி அருகே தீ விபத்தால் வீட்டை இழந்த குடும்பத்துக்கு நெய்வேலி தொகுதி எம்.எல்.ஏ. சபா.ராஜேந்திரன் நிவாரண உதவியை வழங்கினார்.
பண்ருட்டி ஒன்றியம், நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தெற்கு மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது கூரை வீடு மின் கசிவு காரணமாக எரிந்து சாம்பலானது.
இந்தத் தகவலை அறிந்த நெய்வேலி எம்.எல்.ஏ. சபா.ராஜேந்திரன் பாதிக்கப்பட்ட செந்தில்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு பணம் உள்ளிட்ட நிவாரண உதவிகளை புதன்கிழமை வழங்கினார். வருவாய் ஆய்வாளர் சேகர், கிராம நிர்வாக அலுவலர் கனிமொழி, ஒன்றிய அவைத் தலைவர் ராஜா, துணைச் செயலர் செல்வக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.